×

முன்னாள் சாம்பியனின் பரிதாபம்: கோஸ்டாரிக்காவை வீழ்த்தியும் வெளியேறிய ஜெர்மனி

உலக கோப்பை கால்பந்து தொடர் இ பிரிவில் அல்பேட் மைதானத்தில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள ஜெர்மனி 31வது இடத்தில் உள்ள கோஸ்டாரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டாரிக்கா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 70வது நிமிடத்தில் கோஸ்டாரிக்காவின் மானுவல் நியூர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது. இதில் வெற்றி பெற்றாலும் ஜெர்மனி அடுத்த சுற்று வாய்ப்பு இழந்து வெளியேறியது. இ பிரிவில் ஜெர்மனி ஒரு தோல்வி, ஒரு டிரா, ஒரு வெற்றி மூலம் 4 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்த இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கோல் வித்தியாசம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஸ்பெயின் 6, ஜெர்மனி 1 என வந்தது. இதன் மூலம் 2வது இடம் ஸ்பெயினுக்கும், 3வது இடம் ஜெர்மனிக்கும் கிடைத்தது. முதல் இரண்டு அணிகள் மட்டுமே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் சென்றன. 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி சோகத்துடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது….

The post முன்னாள் சாம்பியனின் பரிதாபம்: கோஸ்டாரிக்காவை வீழ்த்தியும் வெளியேறிய ஜெர்மனி appeared first on Dinakaran.

Tags : Germany ,Costa rica ,World Cup Football Series E Division ,Alphate Ground ,Costa Africa ,Dinakaran ,
× RELATED ரேவண்ணா, பிரஜ்வல் வீடுகளில் போலீசார்...